திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண் குமார், உத்தரவின்படியும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடிலிங்கம் (சைபர் கிரைம் பிரிவு) அறிவுறுத்தலின்படியும் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பாக திருவெறும்பூரில் உள்ள BHEL- நிறுவனத்தில் சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் இணையவழி நிதிமோசடி சம்பந்தப்பட்ட குற்றங்கள் பற்றியும், சமூக வலைதள குற்றங்கள் பற்றியும் அக்குற்றங்களிலிருந்து எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வது என்பது பற்றியும், வலைதளங்களை எவ்வாறு பாதுகாப்பாக உபயோகப்படுத்துவது என்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், சைபர் கிரைம் சம்பந்தப்பட்ட புகார்களை பதிவு செய்யும் வலைதளம் www.cybercrime.gov.in மற்றும் இலவச சைபர்கிரைம் உதவி எண் 1930 பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நிறுவனத்தின் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் 450 பேர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments