Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

“கல்வியில் சிறந்த மாநிலம்” விவகாரம்: அண்ணாமலை விமர்சனத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி

திருச்சி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட கீழ சிந்தாமணியில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி பல்நோக்கு அலுவலக பயன்பாட்டு கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி திறந்து வைத்தார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது கூறும் போது, கல்வியில் சிறந்த மாநிலம் தமிழகம்
என தமிழக முதல்வர் கூறியது
தரவுகள் அடிப்படையிலேயே
அது உண்மை என நிரூபிக்கப் பட்டுள்ளது. மாய பிம்பம் என அண்ணாமலை விமர்சனத்திற்கு
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதில் கூறினார்.
தமிழகத்தில் பள்ளி இடைநிற்றல் என்ற தவறான கருத்து பரப்பப்
படுகிறது.

அது உண்மையில்லை தமிழகத்தில் ஆரம்ப கல்வியில் இடைநிற்றல் என்ற பேச்சுக்கே இடமில்லை இந்திய அளவில் உயர்நிலை, மேல்நிலைக் கல்வியில் இடைநிற்றல் 14 சதவீதமாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் 7.7 சதவீதமாகவே உள்ளது. இதில் மாணவர்கள் பலர்
பள்ளிப்படிப்பை இடையிலேயே நிறுத்திவிட்டு ஐடிஐ போன்ற படிப்புகளில் சேர்கின்றனர்.

எனவே இடைநிற்றல் சதவீத கணக்கில் வருகிறது. எனவே இந்த சதவீதம் குறையும். திமுக ஒருபோதும் விளம்பரத்திற்கான அரசாங்கம் இல்லை என்பதை தெளிவு படுத்தினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளி சுற்றுச்சூழல் இடிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது வேதனைக்குரியது செய்தி இந்த துயர செய்தி குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.

இந்த விபத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மூன்று லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டாலும் போன உயிர் திரும்ப வராது.

மாணவர் தரப்பில் வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும்.
இறந்த மாணவனின் சகோதரருக்கு கல்வி சார்ந்த உதவிகள் வழங்க மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

இந்நிகழ்வில் மண்டல குழு தலைவர் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் மாமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *