Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

விசா காலாவதியான வெளிநாட்டு நபர்களுக்கு மாவட்ட காவல் அலுவலத்தில் விளக்கக்கூட்டம்

திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட குற்ற பதிவேடுகள் கூடத்தில் வெளிநாட்டினர் பதிவுகள் பிரிவானது காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்த வெளிநாட்டினர் பதிவுகள் பிரிவில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு வருகை புரியும் வெளிநாட்டைச் சேர்ந்த நபர்களின் கடவுச்சீட்டு இ விசாவின் வகை மற்றும் வருகை புரிந்துள்ள


விசாவை பயன்படுத்தி எவ்வளவு நாட்கள் இங்கு இருக்க அனுமதி பெற்றுள்ளனர் ஆகிய அனைத்து தகவல்களும் பாரமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 179 வெளிநாட்டைச் சேர்ந்த (ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், பொஷ்வானா, கனடா, எத்தியோபியா, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், சோமலியா, இலங்கை, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா) நாட்டைச் சேர்ந்தவர்கள் சுற்றுலா, கல்வி மற்றும் இதர விசாக்களை

இந்திய தூதரகம் மூலமாக விண்ணப்பித்து பெற்று தற்போது வருகைபுரிந்து தங்கியுள்ளனர் என்ற விவரம் தெரிய வருகிறது. இவர்களில் 64 வெளிநாட்டு நபர்கள் (இலங்கை மற்றும் மலேசியா) நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்களது விசாவின் கால அளவானது முடிவுற்றுள்ள நிலையிலும் இந்தியாவை விட்டு வெளியேறாமலும் அல்லது தங்களது விசாவை புதுப்பிக்காமலும் இருந்து வந்துள்ளனர். இவ்வாறு விசா காலம் முடிந்தும் இந்தியாவில் தங்கியிருப்பது வெளிநாட்டினர் சட்டம் 1946 பிரிவு 14(அ)ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதால் இந்த 64

வெளிநாட்டினர்களை திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தசெல்வநாகரத்தினம் அவர்கள் உத்தரவுப்படி மாவட்ட குற்ற பதிவேடுகள் கூடத்தின் காவல் துணை கண்காணிப்பாளர் அ.கதிரவன் தலைமையில் 01.08.2025 இன்று இந்த வெளிநாட்டு நபர்கள் தங்கியுள்ள காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவலர்கள் மூலமாக அழைத்து வர ஏற்பாடு செய்து கூட்டம் நடத்தப்பட்டது.


மேற்படி கூட்டத்தில் விசா காலம் முடிந்தும் இந்தியாவில் தங்கியிருப்பது சட்டப்படி தவறு என்பதை இந்த வெளிநாட்டு நபர்களுக்கு தெரியபடுத்தி இவர்கள் தொடர்ந்து இந்தியாவில் தங்க வேண்டும் பட்சத்தில் தங்கள் விசாவை FRRO இணையதளம் முகப்பு வாயிலாக எவ்வாறு புதுப்பிக்க விண்ணப்பித்து பெற வேண்டும் என்பதையும் அல்லது தங்களது சொந்த நாட்டிற்கே செல்ல விரும்பும் பட்சத்தில் வெறியேற்ற அனுமதிக்கு FRRO இணையதள முகப்பு வாயிலாக எவ்வாறு விண்ணப்பித்து இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தி தொடர்ந்து

எந்தவித விண்ணப்பமும் செய்யாமல் இருக்கும்பட்சத்தில் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும் என்பதை தெரிவித்து முடிக்கப்பட்டது. இவ்வாறு விசா காலம் முடிந்து இந்தியாவில் தங்கியுள்ள வெளிநாட்டினர்கள் தாங்கள் தங்கியுள்ள எல்லைக்குட்பட்ட மாவட்ட காவல் அலுவலகத்திற்கு செல்லும்பட்சத்தில் அவர்களுக்கு அனைத்து வழிநெறிமுறைகள் கொள்ளப்படுகிறது.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *