Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சியில் “கேக் பெஃஸ்டிவல் போட்டி” – முன்பதிவு தொடக்கம்

புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திருச்சி சாரதாஸ் வழங்கும் ஹலோ எப்.எம். நடத்தும் கேக் பெஃஸ்டிவல்”. நடைபெற உள்ளது. 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட மகளிர் மட்டும் பங்குபெறக்கூடிய வகையில் இப்போட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இப்போட்டியின் முதல் சுற்றாக இதில் பங்கேற்க விரும்பும் பெண்கள் தங்கள் பெயர் மற்றும் முகவரியை டிசம்பர் 17ம் தேதிக்குள் 78239 11711 என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப் செய்யவேண்டும். முதல் சுற்றில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற வடிவிலான கேக்கை அலங்காரம் செய்வதோடு அதன் செய்முறையை காணொளியாக பதிவு செய்யவேண்டும். போட்டி குறித்த அனைத்து விதிமுறைகளும் போட்டியாளர்களுக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும். 

அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் நிறுவனத்தின் கேக் தயாரிக்கும் துறையின் தலைமை நிபுணருடன் சேர்ந்து ஹலோ எப்.எம் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் இப்போட்டியில் பதிவு செய்பவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று மதிப்பெண்கள் வழங்குவார்கள். இவ்வாறு நடைபெறும் முதல் சுற்றில் தேர்வானவர்கள் பிரம்மாண்டமாக நடைபெறும் இறுதிப்போட்டியில் பங்குபெறுவார்கள். போட்டிகளில் பங்குபெற பதிவுக்கட்டணம் ஏதுமில்லை.

டிசம்பர் 28ம் தேதி சனிக்கிழமை அன்று காலை 09:00 மணிக்கு திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை தீரன் நகரில் அமைந்துள்ள எஸ்.ஏ.எஸ். ஸ்கொயர் திருமண மண்டபத்தில் நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டியில் முதலாவதாக தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளருக்கு இந்த வருடத்தின் கேக் பெஃஸ்டிவல் ராணியாக மகுடம் சூட்டப்படும். இரண்டாவது மற்றும் மூன்றாவது வெற்றியாளர்களுக்கு கண்கவரும் பரிசுகள் கொடுப்பதோடு இறுதிப்போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து போட்டியாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். 

கேக் வகைகளை சுவைபட தயாரிக்கும் முறைகளை பற்றி பிரபல கேக் நிபுணர் அரங்கத்தில் பார்வையாளர்களுக்கு நேரில் கற்றுத்தரவுள்ளார். அத்தோடு அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் வேடிக்கை விளையாட்டுக்களும் நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டியில் பார்வையாளராக கலந்துகொள்ள விரும்புவோர் ஹலோ எப்.எம் அலுவலகத்தில் கட்டணமில்லா அனுமதி டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம். இந்நிகழ்ச்சி பற்றிய விபரங்களை மேலும் தெரிந்துகொள்ள ஹலோ எப்.எம் 106.4 உடன் இணைந்திருங்கள் அல்லது 0431 4271000 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். 

இந்நிகழ்ச்சியை வழங்குவோர் திருச்சி சாரதாஸ். இணைந்து வழங்குவோர் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ், உடன் வழங்குவோர் கல்யாணி கவரிங், ஆவ்ர்யா தி ஹௌஸ் ஆப் அச்சூஸ், கொங்கு தங்கமாளிகை, மேக்னா இமிட்டேஷன் ஜூவெல்லரி. வென்யூ பார்ட்னெர் எஸ்.ஏ.எஸ். ஸ்கொயர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *