திருச்சி லால்குடி அருகே மாந்துறை நகர் பகுதியை சேர்ந்த கார்த்தி, சாதிக், அப்துல்லா, ஆசிக், திலீப் உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்டோர் தனது நண்பன் லால்குடி கொடிக்கா தெருவை சேர்ந்த சந்தோஷ் வெளிநாட்டிற்கு அனுப்புவதற்காக இன்று காலை சைலோ காரில் புறப்பட்டு சென்று உள்ளனர்.
அப்போது திருச்சி லால்குடி அருகே நகர் சாலை பகுதிக்கு கார் வந்து கொண்டிருந்தபோது நிலை தடுமாறி எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த விஸ்வநாதன் (வயது 50) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். தொடர்ந்து காரில் வந்தவர்கள் ஐந்திற்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து திருச்சி லால்குடி அரசு மருத்துவமனையிலும், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் காரில் வந்த இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.சாதிக் வயது 19 அவரும் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து லால்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments