திருச்சி திமுகவின் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் குறிப்பிட்ட சமூகத்தையும் அந்த சமூகத்தை சார்ந்த பெண்களையும் இழிவாக பேசியும் காவல்துறையினரை ஆபாச வார்த்தைகளில் திட்டிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக அந்த சமூகத்தினர் கண்டனக் குரலை பதிவு செய்து வருகின்றனர்.
Advertisement
ஆடியோ விவகாரம் தொடர்பாக தான் எதுவும் தவறாக பேசவில்லை இவை சித்தரித்து வெளியிடப்பட்டது என காடுவெட்டி தியாகராஜன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்
Advertisement
இந்நிலையில் திருச்சி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், குறிப்பிட்ட சமூகத்தை குறித்து தரக்குறைவாக பேசியதாக சமூக வலைத்தளங்களில் ஆடியோ வெளியாகியது. இந்நிலையில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் வகையில் பேசியதாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின்பேரில் காடுவெட்டி தியாகராஜன் மீது காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Comments