திருச்சிக்கு கடந்த சனிக்கிழமை (06.09.2025) வந்த த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திருச்சி விமான நிலையம் வந்து
எதிரே உள்ள விநாயகர் கோவிலில் சாமி கும்பிட சென்றார்.
வருகிற 13-ஆம் தேதி தாவேக்கா தலைவர் விஜய் திருச்சியில் பரப்புரை மேற்கொள்ள உள்ள அதற்கான அனுமதி கடிதத்தை கோயிலில் வைத்து அர்ச்சனை செய்து சாமி கும்பிட்டார்.
அப்போது தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தொண்டர்கள் திருச்சி புதுக்கோட்டை சாலையில் அதிகமான கார்களை நிறுத்தி போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தினர். காவல்துறையினருக்கும் த.வெ.க பொது செயலாளர் ஆனந்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வாகனங்களை எடுத்துக்கொண்டு திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்றனர்.
இதனால் போக்குவரத்து இடையூறு, காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தல், அனுமதியின்றி கூடுதல்
காவல்துறையினரிடம் வாக்குவாதம் அனுமதியின்றி ஒன்று கூடியது.
உள்ளிட்ட 4 பிரிவுகள் கீழ்
த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், திருச்சி கிழக்கு மாநகர் மாவட்ட தலைவர் குடமுருட்டி கரிகாலன் உள்ளிட்ட 6 பேர் மீது திருச்சி ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments