ராம்ஜி நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மாத்தூர் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக அரை சென்ட் நிலம் கிராமத்தில் உள்ளது. அவர் தன் நிலத்திற்கு (9/05/2025) அன்று கடைசியாக சென்றுள்ளார்.
மீண்டும் இன்று சென்ற பொழுது அந்த நிலத்தில்உள்ள மரங்கள் எதையும் காணவில்லை. அது இரண்டு லட்சம் பெறுமானம் உள்ள சீமை கருவேல மரங்கள். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அருகில் இருந்தவரிடம் விசாரித்த பொழுது மாத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பாரதிதாசன் மற்றும் அவரது ஆட்களை வைத்து கருவேல மரங்களை வெட்டி உள்ளதாக தெரியவந்தது.
அதனால் இவர் ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன் நிலத்தில் அத்துமீறி நுழைந்து இரண்டு லட்சம் மதிப்புள்ள மரங்களை வெட்டியதால் தான் மன உளைச்சல் அடைந்ததாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாரதிதாசன் மீதும் அவரது ஆட்கள் மீதும் வழக்கு தொடக்கு வேண்டும் என்றும் அவர் புகார் அளித்துள்ளார். இதைதொடர்ந்து ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் சன்னாசிப்பட்டி பாரதிதாசன் மீது 134/2025 கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments