திருச்சி மாவட்டம் முசிறி காவல் உட்கோட்ட முசிறி காவல் நிலைய எல்லைக்குட்ட பகுதிகளில் துறையூர் மதுவிலக்கு அமலாக்கபிரிவினர் கள்ளதனமாக மதுபானம் விற்பனை தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் பாண்டிச்சேரியில் இருந்து கள்ளதனமாக மதுபானங்களை கடத்தி வந்து முசிறி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்
OMNI Car-ல் வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த முசிறி, தா.பேட்டை ரோடு சிவகாமி நகரை சேர்ந்த சரவணன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து பாண்டிச்சேரி மது பாட்டில்கள் 244, மது விற்பனைக்கு பயன்படுத்திய OMNI CAR. பணம் ரூ.710, GODOWN KEY மற்றும் LAVA BUTTON Phone 2 NOS ஆகியவற்றை கைப்பற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டு சரவணன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும், மண்ணச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ கருங்காடு கிராமத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் வெளியான காணொளியின் அடிப்படையில் மண்ணச்சநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரகாஷ் என்பவர் தலைமையில் மண்ணச்சநல்லூர் போலீஸார் கீழகருங்காடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து சென்றபோது மண்ணச்சநல்லூர்,
ராசாம்பாளையம், வடக்கு சாலக்காடுவை சேர்ந்த குமரவேல் மகன் முருகன் என்பவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த குழந்தைவேல் மகன் முருகேசன் என்பவருடன் சேர்ந்து கள்ள தனமாக மது விற்பனை செய்தவர்களை பிடித்து அவர்களிடமிருந்து 27 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் பற்றிய தகவல் தெரிவிக்க 8939146100 என்ற மாவட்ட காவல் அலுவலக உதவி எண்ணை 24 மணிநேரமும் தொடர்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட காவல்துறை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
Comments