தமிழகம் முழுவதும் 52 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்களில் 9 போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 13 பேருக்கு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. திருச்சி மத்திய மண்டல ஜ.ஜி. கார்த்திகேயன் சென்னை அமலாக்க பிரிவு ஐ.ஜி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக சென்னை குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை ஐ.ஜி. ஜோசிநிர்மல்குமார் மத்திய மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல் திருச்சி சரக டி.ஐ.ஜி மனோகர் சென்னை பெருநகர சட்டம் ஒழுங்கு தெற்கு இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் டி.ஐ.ஜி-யாக பதவி உயர்வு பெற்று திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் சென்னை பெருநகர செயிண்ட் தாமஸ் மவுண்ட் துணை போலீஸ் கமிஷனர் செல்வநாகரத்தினம் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதே போல் திருச்சி மாநகர தலைமையிட துணை போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும், வடக்கு துணை போலீஸ் கமிஷனர் விவேகானந்த சுக்லா, ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும், தெற்கு துணை போலீஸ் கமிஷனர் செல்வகுமார் மதுரை குடிமைபொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு பதிலாக சென்னை சைபர்கி ரைம்-3 போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் திருச்சி மாநகர தெற்கு துணை போலீஸ் கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments