தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புதுக்கோட்டையில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று புறப்பட்டார். திருச்சி வந்த அவருக்கு சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி , மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்று தெரிவித்தனர். பின்பு திருச்சி வழியாக விராலிமலையில் உள்ள ஐடிசி நிறுவனத்தின் ஆசிர்வாத் ஆட்டா வின் தொழிற்சாலையில் சுமார் 100 கோடி ரூபாயில் திறக்கப்பட்டது.

Advertisement
அதன்பிறகு விராலிமலையில் பொதுமக்கள் வரவேற்பு அளிக்க காத்திருந்த இடத்தில் முதல்வரைப் போலவே வேடம் அணிந்து இருந்த சிறுவன் ஒருவனை அழைத்து முதல்வர் பாராட்டினார். பின்பு வெண்கல சிலையினால் அமைக்கப்பட்ட சீறிய காளையை வீரர் ஒருவர் அடக்குவது போன்ற தத்ரூபமான சிலையினை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

பின்பு விராலிமலையில் இருந்து இலுப்பூர் வழியாக புதுக்கோட்டைக்கு செல்லும்போது இலுப்பூரில் ஜல்லிக்கட்டு காளைகள் பராமரிப்பதை பார்வையிட்டு சென்றார். பின்பு கவிநாடு கன்மாயை பார்வையிட்ட முதல்வர் அங்கு ஏர் பூட்டிய மாட்டு வண்டியில் திடீரென்று ஏறி நின்று பொதுமக்களுக்கு வணக்கம் தெரிவித்தார்.

அப்போது மாட்டு வண்டியில் நின்ற முதல்வர் தடுமாறி விட்டார்.பின்பு சமாளித்து நின்று விட்டார். அக்காட்சி சிறு பதட்டத்தை உருவாக்கியது. பாதுகாப்பு வளையத்தை மீறி பொதுமக்களுடன் கூட்டத்தில் கலந்து விட்ட முதல்வரை மீண்டும் பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவர பாதுகாப்பு அதிகாரிகள் திணறி விட்டனர்.
Advertisement







Comments