திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கோவில் மண்டபத்திற்கு வெளியே சொக்கப்பனை கண்டருளி பக்தர்களுக்கு மாரியம்மன் வெள்ளிக் கவசத்தில் கிரீட நாகத்துடன் அருள் பாலித்தார். அப்போது விண்ணைப் பிளக்க ஓம் சக்தி, பராசக்தி அங்கிருந்த பக்தர்கள் கோஷமிட்டனர்.

முன்னதாக உற்சவ அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து அம்மன் புறப்பாடு கண்டு கோவில் முன் மண்டபம் அருகே அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை கோபுரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனையடுத்து சொக்கப்பனைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டு சொக்கப்பனை கொழுத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து அம்மனை வழிபட்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments