"கணவரை காணவில்லை கண்டுபிடித்து தாங்க கலெக்டர் ஐயா" - திருச்சியில் பரபரப்பு!!

"கணவரை காணவில்லை கண்டுபிடித்து தாங்க கலெக்டர் ஐயா" - திருச்சியில் பரபரப்பு!!

திருச்சி கே.கே நகர் முள்ளிப்பட்டியை அடுத்த வங்காரப்பட்டியை சேர்ந்தவர் ஜஹாங்கிர் என்கிற தாஸ்.‌ மனைவி சோபியா மற்றும் 3 குழந்தைகளுடன் அப்பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இவர் வெளிநாடுகளுக்கு பணிபுரிய ஆட்களை தேர்வு செய்து அனுப்பும் ஒரு நிறுவனத்தின் மேலாளராக பணிபுரிந்துள்ளார். இந்த நிறுவனத்தில் இவரின் மூலம் 40க்கும் அதிகமானோர் பணம் செலுத்திய நிலையில் வெளிநாட்டுக்கு இதுவரை அனுப்பப்படவில்லை. இதனால் ஜஹாங்கீர் என்பவரை பணம் கட்டிய சிலர் மிரட்டி வந்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில் கடந்த 20 நாட்களாக கணவரை காணவில்லை என போலீசாரிடம் பலமுறை மனு கொடுத்தும், முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது மூன்று குழந்தைகளுடன் மண்ணெண்ணெய் கேனை எடுத்துக் கொண்டு வந்துள்ளார்.

Advertisement

கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து சோபியாவை ஆட்சியரை சந்திக்க அழைத்துச் சென்றனர். ஆட்சியரிடம் கணவரை காணவில்லை கண்டுபிடித்து தாங்க‌‌ ஐயா என மனு கொடுத்துள்ளார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய…https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP