2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சி நேரம் பல்வேறு விதமான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். புதிதாக கட்சி ஆரம்பித்த தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் நேரடியாக மக்களை சந்தித்து பரப்பரையில் ஈடுபடவில்லை என்று தொடர்ந்து அனைத்து கட்சிகளும் குற்றச்சாட்டை முன்வைத்தன. திருப்புமுனை ஏற்படுத்தும் திருச்சியில் வருகிற 13-ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது தேர்தல் பரப்புரையை துவங்குகிறார்.
திருச்சி tvs டோல்கேட், மேலப்புதூர், பாலக்கரை ,மரக்கடை வழியாக ரோடு ஷோ நடத்தி பின்னர் உரையாற்றும் இடத்தை த.வெ.க பொதுச் செயலாளர் தேர்வு செய்து திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினியிடம் இன்று கொடுத்தார். திருச்சியில் 43 இடங்கள்
ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சியில் அண்ணா சிலை ,சத்திரம் பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு, புத்தூர் நால்ரோடு இந்த பகுதியில் ரோடு ஷோ (நின்று பேச) நடத்த அனுமதி கொடுக்க முடியாது என காவல்துறை அந்த பட்டியலில் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த் தங்கள் தலைவர் விஜய் உரையாற்றும் இடம் சத்திரம் பேருந்து நிலையம் என அவர் தனது அனுமதி வேண்டிய கடிதத்தில் குறிப்பிட்டு அதனை வெளியிட்டுள்ளார். சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை, ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு இவைகள் கொடுக்கவே முடியாது என காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர். தமிழக வெற்றி கழகத்தினர் புத்தூர் நால் ரோடு பகுதியில் கடந்த மாதம் அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி பரப்புரை மேற்கொண்டார் இதேபோல் மற்ற கட்சியினரும் அங்கு பொதுக்கூட்டம் மற்றவைகளை நடத்தினர். திருச்சி ஒத்தக்கடை மாநகராட்சி அலுவலகம் எதிரே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மிகப்பெரிய பேரணி பொதுக்கூட்டத்தை நடத்தினர்.தற்பொழுது காவல் துறையினர் சத்திரம் பேருந்து நிலையம், அண்ணா சிலை இந்த பகுதிகளில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசுவதற்கு அனுமதி மறுத்து வருகின்றனர்.
தமிழக வெற்றி கழகத்தினர் ஒவ்வொரு கட்சியினருக்கும் ஒவ்வொரு மாதிரி அனுமதியை காவல் துறையினர் முடிவெடுத்து வருவதாக குறிப்பிட்டு தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். எப்படி இருந்தாலும் காவல்துறை மரக்கடை எம்ஜிஆர் சிலை முன்பு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பேசுவதற்கு அனுமதி கொடுப்போம் என மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இனி தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இதனை முடிவு செய்து தங்களது அனுமதி பாதுகாப்பு வேண்டிய கடிதத்தை கொடுப்பார்களா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments