ஊக்கமருந்து புகார்! திருச்சியை சேர்ந்த கோமதி மாரிமுத்துவின் தங்கப் பதக்கம் பறிப்பு! 4 ஆண்டுகள் தடை!!

ஊக்கமருந்து புகார்! திருச்சியை சேர்ந்த கோமதி மாரிமுத்துவின் தங்கப் பதக்கம் பறிப்பு! 4 ஆண்டுகள் தடை!!

கடந்த ஆண்டு தோஹாவில் நடைபெற்ற ஆசிய போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கோமதி மாரிமுத்து இந்திய அளவில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.ஒரு எளிமையான குடும்பத்தில் இருந்து இவ்வளவு தூரம் சென்று முயற்சி அடைந்ததற்காக பலரும் உதவி செய்து வந்தனர்.இந்நிலையில் அவருக்கு ஊக்க மருந்து பயன்படுத்தியது முதற்கட்ட சோதனையில் உறுதியான நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் அவர் போட்டிகளில் பங்கேற்க தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

தற்போது இரண்டாம் கட்ட சோதனையிலும் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதிசெய்யப்பட்ட நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு அவர் போட்டியில் பங்கேற்க அத்லெடிக் இன்டெக்ரிடி யூனிட் அமைப்பு தடை விதித்துள்ளது. மேலும் ஊக்கமருந்து எடுத்துக்கொண்டது உறுதியான நிலையில் ஓட்டப்பந்தய வீராங்கனை கோமதி மாரிமுத்துவின் ஆசியப் போட்டி தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக கூறியுள்ள கோமதிமாரிமுத்து தான் ஊக்கமருந்து எடுத்துக் கொள்ளவில்லை என்றும், அசைவ உணவில் அந்த வஸ்து இருந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.