Site Logo mobile
Search Icon
Mobile Gif
Articles

சட்டீஸ்கர், தெலுங்கனாவை கைப்பற்றுகிறது காங்கிரஸ்? கருத்துக்கணிப்புகளில் தகவல்

ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், பெரிய மாநிலங்களான மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானை பா.ஜ.க, கைப்பற்றுகிறது. சத்தீஸ்கரில் ஆட்சியை தக்க வைப்பதுடன், காங்கிரசுக்கு கைமாறப்போகிறது தெலுங்கானா என, தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகளில் தெரியவந்துள்ளது. வடகிழக்கு மாநிலமான மிசோரமில், கடும் இழுபறி நிலவுவதாகவும் தெரியவந்துள்ளது.

நாடாளுமன்றத்திற்கு அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. இதில், மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் பா.ஜ.க, உள்ளது. இந்நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா உட்பட ஐந்து மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடந்தது. கடந்த மாதம் 7ல் துவங்கி, நேற்று வரை வாக்குப்பதிவுகள் நடந்தன. தேர்தல் முடிவுகள், நாளை மறுதினமான 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெளியாக உள்ளன.

தெலுங்கானாவில் நேற்று வாக்குப்பதிவு முடியவும் பல தனியார் ‘டிவி சேனல’கள், தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகளை வெளியிட்டுள்ளன. இவற்றில், மத்திய பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியை தக்க வைப்பதுடன், ராஜஸ்தானையும் பா.ஜ.க கைப்பற்றும் என, கூறப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் ஆட்சியை காங்கிரஸ் தக்க வைக்கும் காங்கிரசுக்கு கூடுதலாக தெலுங்கானா கிடைக்கும் என, அதில் தெரியவந்துள்ளது. வடகிழக்கு மாநிலமான மிசோரமில் கடும் இழுபறி நிலவுவதால், தொங்கு சட்டசபை அமையலாம் எனவும் தெரியவந்துள்ளது.

சத்தீஸ்கர் : மொத்தம், 90 தொகுதிகள் உள்ள , முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி, அடுதத ஐந்து ஆண்டுகளுக்கு தொடரும் என, பெம்பாலான கணிப்புகள் கூறுகின்றன. பெரும்பான்மைக்கு, 46 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ், 50 பா.ஜ.க 38 இடங்களில் வெற்றி பெறும் என, கணிப்புகள் கூறுகின்றன. 

மத்திய பிரதேசம் : மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான இங்கு, 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 2003ல் இருந்து இங்கு பா.ஜ.க, ஆட்சியை பிடித்து வந்துள்ளது. கடந்த 2018 தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. ஆனால், உள்கட்சி மோதலால் காங்கிரஸ் ஆட்சியை இழக்க, 2020ல் பா.ஜ.க மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. கடந்த 2005ல் முதல் முறையாக முதல்வரான, சிவராஜ் சிங் சவுகான், பா.ஜ.க வின் நீண்டகால முதல்வர் என்ற பெருமையை பெற்றுள்ளார் .தற்போது ஐந்தாவது முறையாக அவர் முதல்வராகும் வாய்ப்பு கிடைக்கும் என, கணிப்புகள் கூறுகின்றன. ஆனால் தேர்தல் பிரசாரத்தின்போது, முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலேயே பா.ஜ.க தேர்தலை சந்தித்தது அதனால், அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்பதை கட்சித் தலைமையே முடிவு செய்யும். பெரும்பான்மைக்கு, 116 இடங்கள் தேவை என்ற நிலையில் பா.ஜ.க 125 இடங்களிலும் காங்கிரஸ் 102 இடங்களிலும் வெற்றி பெறும் எனவும், கணிப்புகள் கூறுகின்றன.

தெலுங்கானா : கடந்த 2014ல் உருவான இந்த மாநிலத்தில், 119தொகுதிகள் உள்ளன தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் வென்ற முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்ட்ர சமிதி, மீண்டும் வெல்லும் என எதிர்பார்த்திருந்த நிலையில் இங்கு பெரிய திருப்பமாக, காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என, தேர்தலுக்குப் பித்தைய கணிப்புகள் கூறுகின்றன பெரும்பான்மைக்கு, 60 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ், 60 தொகுதிகளில் வெல்லும் என, கணிப்புகள் கூறுகின்றன. ஆளும் பி.ஆர் எஸ் எனப்படும் பாரத் ராஷ்ட்ர சமிதி, 48 இடங்களில் வெல்லும் அசாதுதீன் ஓவைசியின், ஏஐஎம்ஐ எம், கடசி ஆறு இடங்களையும், பா.ஜ.க ஐந்து இடங்களையும் பிடிக்கும் என கணிப்புகள் கூறுகின்றன.

ராஜஸ்தான் : ராஜஸ்தான் மொத்தம், 200 தொகுதிகள் உள்ள இங்கு 199 தொகுதிகளுக்கு தற்போது தேரதல் நடந்துள்ளது கடந்த 1990களில் இருந்து நடந்த தேர்தல்களில் ஆளுங்கட்சி வென்றதில்லை.அது இந்தத் தேர்தலிலும் தொடரும் என, கணிப்புகள் கூறுகின்றன. பெரும்பான்மைக்கு 101 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் 76 இடங்களில் மட்டுமே வெல்லும் என கணிப்புகள் கூறுகின்றன. இங்கும் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் தேர்தலை சந்தித்த பாஜ.வுக்கு 111 இடங்கள் கிடைக்கும் என, கணிப்புகள் கூறுகின்றன.

மிசோரம் : வடகிழக்கு மாநிலமான மிசோரமில், 40 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், கடும் இழுபறி நிலவும் என, கணிப்புகள் கூறுகின்றன முதல்வர் ஜோரம்தங்கா தலைமையிலான மிசோ தேசிய முன்னணி மற்றும் ஜோரம் மக்கள் இயக்கம் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இசபி எம் எனப்படும் ஜோரம் மக்கள் கட்சி, 17 இடங்களிலும் எம்.என்.எப். எனப்படும் மிசோ தேசிய முன்னணி, 14 இடங்களிலும் வெல்லும் காங்கிரஸ், எட்டு இடங்களி லும், பா.ஜ.கவிற்கு ஒரு இடம் மட்டுமே கிடைக்கும் எனவும் கணிப்புகள் கூறுகின்றன. மேற்கண்ட விபரங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கள் என்பதால் மக்கள் உண்மையில் யாருக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பதை வரும் 3ம் தேதி தேர்தல் வாக்கை எண்ணி தேர்தல் ஆணையம் அறிவிக்கும் வரை பொறுமையாகத்தான் இருக்க வேண்டும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… 

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *