வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து திருச்சியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வந்தது. இதன் காரணமாக திருச்சி மாவட்டத்தில் நீர்நிலைகள் முழுவதும் நிரம்பி காணப்படுகின்றன. மேலும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
குறிப்பாக கே.கே.நகர், கிராப்பட்டி, தில்லைநகர் ஆகிய பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதன் ஒரு பகுதியாக திருச்சி தில்லை நகர் சாஸ்திரி ரோட்டில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்கள் உள்ள பகுதிகளில் மழைநீருடன் சாக்கடை கழிவு நீரும் வெளியேறி அப்பகுதியில் சூழ்ந்துள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக மழைநீருடன் கழிவுநீரும் கலந்து அப்பகுதி முழுவதும் தேங்கி இருப்பதால் துர்நாற்றம் மற்றும் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. மேலும் நடைபாதை முழுவதும் இந்த கழிவுநீர் தேங்கி நிற்பதால் இதை மிதித்து கொண்டு வீடு மற்றும் அலுவலகத்திற்கு வரவேண்டிய சூழ்நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மாநகராட்சியில் கடிதம் மூலம் புகார் அளிக்கப்படும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை இது சம்பந்தமாக யாரும் வந்து நேரில் ஆய்வு செய்யவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். உடனடியாக இங்கு உள்ள சாக்கடைகளை தூர்வாரி தேங்கியுள்ள கழிவு நீரை அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments