Site Logo mobile
Search Icon
Mobile Gif
Citizen Voice

தீபாவளி பண்டிகை வருவதையொட்டி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி என்ன செய்ய வேண்டும்? – மக்கள் கருத்து!

கொரோனா நோய் தொற்றால் உலகம் முழுவதும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது. பண்டிகை காலங்கள் எல்லாம் கொண்டாட முடியாத அளவிற்கு தடை உத்தரவை நீடித்தது. இந்நிலையில் பல தடைகளுக்குப்  பிறகு ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை மக்கள் கொண்டாடினர். அதனைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தின் பிரசித்திபெற்ற தீபாவளி பண்டிகை வருவதையொட்டி திருச்சி மாநகராட்சி கொரோனா காலகட்டத்தில் எதிர்கொண்டு பண்டிகையை கொண்டாடுவதற்கு என்ன மாதிரியான வழி முறைகள் செய்ய வேண்டும் என மக்கள் கருத்தினை திருச்சி விஷன் சார்பாக முன்வைத்தோம். இதுகுறித்து திருச்சி மக்கள்  பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பகிர்ந்துள்ளனர்.

ஷ்யாம் சுந்தர்
திருச்சி

“திருச்சியில் பண்டிகை காலங்களில் நெருக்கடியான சூழ்நிலை நிலவுகிறது இதனால் மாநகராட்சி சார்பில் பல இடங்களில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.திருச்சியின் முக்கிய பகுதியான தில்லைநகர், சாஸ்திரி ரோடு, கரூர் சாலையில் வணிக நிறுவனங்கள் அதிகமாக உள்ளதால் அங்கு மாநகராட்சி தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முக கவசம் அணியாதவர்களுக்கு கண்டிப்பாக அபராதம் விதிக்க வேண்டும்”. என்கிறார்

சாதிக்
திருச்சி

“மற்ற மாவட்டங்களை விட திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்பது பாராட்டுக்குரியது அதேபோல தீபாவளி வரும் சமயத்தில் பெரிய கடை வீதி மற்றும் சின்ன கடை வீதிகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும், கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்றும் இதனை காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும்” என்கிறார்

விக்னேஷ் இளையராஜா
திருச்சி

“திருச்சி பெரிய வணிக நிறுவனங்கள் பண்டிகை காலங்களில் கூட்டம் கூடுவதை கருத்தில்கொண்டு மொபைல் ஷாப்பிங் கொண்டு வர வேண்டும். இதன்மூலம் திருச்சியின் பல பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு வணிகம் செய்ய வேண்டும். இதன் மூலம் கூட்டம் கூடாமல் தவிர்க்கலாம். ஜவுளி மற்றும் இனிப்பு கடைகள் ஆன்லைன் மூலம் தங்களுடைய விற்பனைகளை துவங்கினால் கூட்டம் கூடுவதை தவிர்க்கலாம். எனவே இதனை மாநகராட்சி உடனே நடைமுறைப்படுத்தலாம்” என்கிறார்

சிந்து
திருச்சி

“தீபாவளி பண்டிகை வருவதால் பொதுமக்கள் ஆங்காங்கே கூட்டம் சேருவதைத் தவிர்க்காமல் மாநகராட்சி பார்த்துக் கொள்ள வேண்டும். கடைகளுக்கு வரும் பொதுமக்கள் அனைவரையும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு உள்நுழையும் போது சனிடைசர் கொடுக்கவும் மாநகராட்சி அறிவுறுத்த வேண்டும். மேலும் இப்பணிகளை திருச்சியின் தன்னார்வலர்களை வைத்து ஒருங்கிணைக்கலாம்” என்கிறார்.

மேலும் திருச்சி மக்களாகிய நீங்கள் உங்களுடைய கருத்துக்களை எங்களுடைய இணைய தளத்திற்கு தெரிவிக்க கீழ்க்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
9787283349

Advertisement

Advertisement

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *