திருச்சி ஆட்சியாளர் அலுவலகத்தில் CPI முற்றுகையால் பரபரப்பு – டிஆர்ஓ மனு வாங்க வராததால் கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே ஓடிச்சென்று போராட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் கோரிக்கை கையெழுத்து பேரணி வெஸ்ட்ரி பள்ளி முன்பு இருந்து புறப்பட்டு மாவட்ட ஆட்சி அலுவலகம் சென்றடைந்து அங்கு மாவட்ட செயலாளர் சிவா தலைமையில் கோரிக்கைஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாநகரில் கட்டப்பட்டு வரும் ஜங்ஷன், மேரீஸ் மேம்பால பணிகளை விரைந்து முடித்திட வேண்டும், திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் நிரப்பப்படாத மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களை உடனடியாக நியமிக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும், திருச்சி மாநகராட்சி மற்றும் கிராமப்புற பஞ்சாயத்து, ஊராட்சி அமைப்புகளின் பணியை தனியாருக்கு காண்டராக்ட் விடுவதை கைவிட வேண்டும்,
திருச்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் திட்டம் & உயர்மட்ட மேம்பாலம் அமைத்திட வேண்டும், பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள புத்தூர் நால்ரோடு டாஸ்மாக் கடையை உடனே அப்புறப்படுத்த வேண்டும், மாநகராட்சி பகுதிகளில் கடை மற்றும் வணிக வளாகங்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள வரி மற்றும்
குப்பை வரியை குறைத்திட வேண்டும்,
பாதாளச் சாக்கடை, குடிநீர் கட்டண வரி உயர்வை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் செல்வராஜ், மாநில செயற்குழு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பத்மாவதி,
சி ஐ டி யு மாவட்ட பொது செயலாளரும், மாமன்ற உறுப்பினர் சுரேஷ், அகில இந்திய விவசாய சங்க மாநில பொருளாளர் அயிலை சிவசூரியன், அகில இந்திய மாணவர் பெருமன்ற மாநில தலைவர் இப்ராஹிம், மற்றும் நிர்வாகிகள் இரா.சுரேஷ்முத்துசாமி, முருகன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் மனு கொடுப்பதற்காக ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற கட்சியை நிறை காவல்துறையினர் உள்ளே அனுமதிக்க மறுத்ததால் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஏற்படும் ஈடுபட்டனர்.இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது
உயிரைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் வந்து மனுவை பெற்றுக் கொள்வதாக காவல்துறை அறிவித்தனர் ஆனால் சுமார் ஒரு மணி நேரம் கடந்து சென்றும் மாவட்ட வருவாய் அலுவலர் வராததால் ஆத்திரமடைந்த கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே சென்று அலுவலர் வாசல் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலக்ஷ்மி வந்து கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டார்.
கம்யூனிஸ்ட் கட்சி முற்றுகை போராட்டத்தாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையினால் அப்பகுதி முழுவதும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.
Comments