திருச்சி – வயலூர் செல்லும் பிரதான சாலை போக்குவரத்து நெருக்கடியான இச்சாலையில் தினசரி 1000க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பள்ளி வாகனங்கள், கனரக வாகனங்கள், ஆட்டோ, கார், வேன் போன்றவை தினசரி லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். இச்சாலையில் சீனிவாசன் நகர் அடுத்து மிகக் குறுகிய சாலை உள்ள அம்மையப்பன் நகர் பேருந்து நிறுத்தம் உள்ளது.

அந்தப் பேருந்து நிறுத்தத்தில் உள்ள நிழற்குடையில் நாற்காலிகள் பழுதடைந்து காணப்படுகிறது. மாதங்களாக அங்கு வந்து செல்லும் பேருந்திற்காக காத்திருக்கும் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் பல மணி நேரம் நிற்க வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது. மேலும் மழை பெய்தால் நிழற்குடையில் உட்கார்ந்து இருக்கும் மக்கள் மீது மழை நீர் ஒழுகி நனைய வேண்டிய அவல நிலையும் தொடர்கிறது.

மேலும் சுற்றிலும் அடைக்கப்பட்டுள்ள போர்டுகள் பழுதடைந்து பல்வேறு இடங்களில் ஓட்டைகளாக இருக்கின்றது. அந்த வழியாக செல்லும் பேருந்துக்கான எண்கள் சரியாக தெரியாமல் எழுத்துக்கள் சிதலமடைந்துள்ளன. இது போன்ற மக்கள் பாதிக்கக்கூடிய பிரச்சனைகள் சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆங்காங்கே இருக்கக்கூடிய இதுபோன்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்படாமல் பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக சரி செய்து கொடுக்க வேண்டும் என மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் லெ.செழியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           81
81                           
 
 
 
 
 
 
 
 

 03 September, 2024
 03 September, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments