திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கீழமுல்லைக்குடி பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் காவிரி ஆற்றின் மணல் தீட்டில் ஒதுங்கி உள்ளதாக திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டதோடு இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் தீயணைப்பு துறையினர் கீழ மூல்லைகுடி பொதுமக்கள் உதவியுடன் காவிரி ஆற்றில் கரை ஒதுங்கிய சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் தண்ணீரில் குளிக்கும் போது அடித்து வரப்பட்டாரா அல்லது யாரேனும் கொன்று வீசினார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்து போனவர் ஊதா கலர் கட்டம் போட்ட கைலியும் அரக்கு கலர் டாயரும் அணிந்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           7
7                           
 
 
 
 
 
 
 
 

 24 August, 2024
 24 August, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments