Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Articles

கொரோனா முன்களப்பணியாளர்களுடன் தீபாவளி கொண்டாட்டம் – அசத்தும் அஸ்வின் ஸ்வீட்ஸ்!

கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 7 மாதங்களாக வாழ்வின் பல கொண்டாட்டங்களை மறந்து தினம் கஷ்டங்களை சந்தித்து வந்தோம். அந்த நேரத்தில் கடந்த ஏழு மாதங்களாக களத்தில் நின்று பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் ,தூய்மைப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், காவல்துறையினர் ஆகியோரின் பங்கு என்பது வெறும் வாய் வார்த்தையால் சொல்லிவிட முடியாது. மக்களுக்காக களத்தில் நின்ற இவர்களுடன் இந்த வருட தீபாவளி கொண்டாடினர் அஸ்வின் ஸ்வீட்ஸ் நிறுவனத்தினர். இவர்களுடன் திருச்சி சூரியன் எஃப் எம் இணைந்து களப்பணியாளர்களுடன் தீபாவளி கொண்டாட்டத்தை தொடங்கினர்.

2003ம் ஆண்டு பெரம்பலூரில் தொடங்கி அதே வீட்டு பக்க்ஷணத்தோடு இன்றளவும் 5 மாவட்ட மக்களின் நாவினை சுவையால் கட்டிப் போட்டுள்ளனர் என்றால் அது மிகையாகாது. உயர்தர மிக்க இனிப்பு வகைகளை பொதுமக்களுக்கு வழங்குவதோடு நின்றுவிடாமல் யாரும் அறியாத அஸ்வின்ஸ் ஸ்விட்ஸ் மறுபக்கத்தை அறியும் போது நெகிழ வைக்கிறது. 

இந்த இக்கட்டான கொரோனா காலகட்டத்தில் அஸ்வின் ஸ்வீட்ஸ் மற்றும் சூரியன் எஃப்எம் இணைந்து திருச்சியில் கடந்த 7 மாதங்களாக கொரோனா நோய் தொற்று காலத்தில் களத்தில் நின்று பணியாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கு‌ இனிப்புகளை வழங்கி இந்த வருட தீபாவளி கொண்டாடி வருகின்றனர் அஸ்வின் ஸ்வீட்ஸ் நிறுவனத்தினர். அந்த வகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக களத்தில் நின்ற மருத்துவர்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட்டது. அதனையடுத்து மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கும் திருச்சி மாநகர காவல்துறையினருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்வின் அஸ்வின் ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் அஸ்வின், திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் வனிதா,மனித வள மேலாளர் முத்துச்சாமி திருச்சி சூரியன் FM RJ சரவணன் முதன்மை தயாரிப்பாளர் அபிராமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *