திருச்சியில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்றது. இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், திமுக தேர்தல் வாக்குறுதி எண் 311ல் சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி 19ந் தேதி முதல் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 7 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது.

இதுவரை அரசு கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து இறுதி முடிவு செய்யாமல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மாநில பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்களை கைது செய்வதை கண்டித்து 26ந் தேதி முதல் மாவட்ட தலைநகரங்களில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தொடர் போராட்டம் நடைபெறும் என அறிவித்து இருந்தனர்.

இந்நிலையில் இன்று திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கு.நவீன்குமார், மாவட்ட தலைவர் சந்தோஷ் குமார், மாவட்ட துணைத் தலைவர்கள் குசேலன், ரெங்கராஜ்,

மாவட்ட துணைச் செயலாளர்கள் மு.விஜயராகவன், விஜயகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் திமுக தேர்தல் வாக்குறுதி எண் 311ல் கூறியது போல் சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி முழக்கங்களை எழுப்பினர்..

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments