வடகிழக்கு பருவமழை வெள்ள தடுப்பு பணிகளை குறித்து ஆய்வு மேற்கொண்டும், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, காவல் துணை ஆணையர்கள், காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பருவமழையின் காரணமாக தாழ்வான தண்ணீர் சூழும் வாய்ப்புள்ள பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்கவும், மழை வெள்ளப் பாதிப்பு உள்ள பகுதியிலிருந்து பொதுமக்களை உடனடியாக பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து வந்து தங்க வைப்பதற்கும் “திருச்சி மாநகர காவல் பேரிடர் மீட்பு குழுவினர்கள்” தக்க பாதுகாப்பு உபகரணங்களுடன் தயாராக இருப்பதாகவும்,

நீச்சல் தெரிந்த காவல் ஆளிநர்களை பாதுகாப்பு பணிக்கு நியமித்தும், மழைநீர் தேங்கும் இடங்கள் மற்றும் பாதிப்பு ஏற்படும் இடங்கள் ஆகியவை கண்டறியப்பட்டு, அவ்விடங்களில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறா வண்ணம் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

எனவே, பருவமழையின் காரணமாக பாதிக்கப்படும் பொதுமக்கள் தங்களுக்கு ஏதாவது உதவிகள் தேவைப்பட்டாலோ, அல்லது தகவல் ஏதும் தெரிவிக்க நினைத்தாலோ கீழ் காணும் காவல்துறை உதவி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு மாநகர காவல் ஆணையர் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

நுண்ணறிவுப்பிரிவு அலுவக எண்எண் : 0431 2331929 / 94981 00615
நுண்ணறிவுப்பிரிவு வாட்ஸ்அப் எண் : 96262 73399
காவல் கட்டுப்பாட்டு அறை அலுவக எண் : 0431-2418070
காவல் கட்டுப்பாட்டு அறை வாட்ஸ்அப் எண் : 93840 39205.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           102
102                           
 
 
 
 
 
 
 
 

 15 October, 2024
 15 October, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments