அக்டோபர் 31ஆம் தேதி வியாழக்கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் திருச்சி மாநகரில் முக்கிய கடைவீதி பகுதியாக இருக்கும் மலைக்கோட்டை, பெரியகடைவீதி மற்றும் என்எஸ்பி சாலை ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணமே உள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு தேவையான ஆடைகளில் ஆரம்பித்து பல்வேறு பொருட்களை வாங்குவதற்காக திங்கள்கிழமை அன்று வெயில் என்றும் பாராமல் பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மக்கள் பாதுகாப்பு மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சுழற்சி அடிப்படையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments