திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நிலத்தடி நீர் அதிகம் உறிஞ்சப்பட்ட,அதிவேகமாக நீர்மட்டம் குறைந்துவரும் குறு வட்டங்களில் சாகுபடி பரப்பளவு
குறைந்துள்ளது.

நுண்ணீர் பாசன முறையைப் பின்பற்றி, நிலத்தடி நீரைத்
திறம்பட பயன்படுத்தி அதிக பரப்பை சாகுபடிக்கு கொண்டுவர 2026-27ஆம்
ஆண்டிற்கு 1500 எக்டர் பொருள் இலக்கு மற்றும் நிதி ரூ.720 இலட்சம் இலக்கு
பெறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத
மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.
சிறு, குறு விவசாயிகள் ஒரு ஏக்கர் முதல் அதிகபட்சமாக 5 ஏக்கர் வரையும், இதர விவசாயிகள் அதிகபட்சம் 12.5 ஏக்கர் வரையும்,

சொட்டுநீர்ப்பாசனம் அமைத்து பயன் பெறலாம்.
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், கணிணி சிட்டா,
அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், நிலவரைப்படம்,
பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-3 மற்றும் வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட
சிறு, குறு விவசாயி சான்று,மண் மற்றும் நீர் பரிசோதனை அட்டை
ஆகியவற்றை http://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்
பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள
வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் அலுவலகங்களை தொடர்பு கொண்டு ஆவணங்களை சமர்ப்பித்து மானியத்தில் சொட்டுநீர்ப்பாசனம்
அமைத்து பயன்பெற மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தாயள்,இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments