Site Logo mobile
Search Icon
Mobile Gif
Articles

ஈசனுக்கே பிடித்த தலம் – மாற்றுரைவரதீஸ்வரர் கோவில் !!

திருஞான சம்பந்தர் மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற திருத்தலம், ஒருகாலத்தில் இந்தப் பகுதியை கொல்லிமழவன் என்ற அரசன் ஆண்டு வந்துள்ளார். அவரின் குழந்தைக்கு தீராத வலிப்பு நோய் இருந்த நிலையில் பல்வேறு மருத்துவர்களை பார்த்து வைத்தியம் செய்தும் குணப்படுத்தவே முடியவில்லை. 

மனமுடைந்த வேளையில் குழந்தையின் உடல் பிரச்சனையை தீர்க்க இத்தல சிவனிடம் வேண்டி நிற்க, அப்போது இத்தலத்தில் எழுந்தருளிய திருஞான சம்பந்த பெருமான் அவர்கள் ‘துணிவளர் திங்கள் துளங்கி விளங்க’ எனும் பதிகம் பாடி குழந்தையின் நோய் தீர்த்தார். இதனால் இன்றுவரை இந்த கோவில் நாட்பட்ட நோய்களை தீர்க்கும் கோவிலாக பார்க்கப்படுகிறது. 

குழந்தைகள் பால் குடிக்காமல் அழுது கொண்டிருக்கும் குளந்தைகளுக்கு பாலாரிஷ்டம் எனும் தோஷம் உள்ளதாக கூறுவார்கள் அந்த பிரச்சனையும், பெண்களுக்கு ஏற்பட கூடிய வயிற்று வலி, மாதவிடாய் பிரச்னைகள், இதனுடன் , நரம்புத் தளர்ச்சி, வாதநோய், சர்ப்ப தோஷம் போன்றவை தீர்க்கும் பக்தர்கள் நம்புகின்றனர்.

அரசனின் குழந்தையை தாக்கிய நோய்யை பாம்பாக மாற்றி அதன்மீது சிவன் நின்று ஆடியதாக நம்பிக்கை. அதனால் இங்கு இருக்கும் நடராஜர் சிலையின் கீழ் பாம்பு இருக்கும் வகையில் இருக்கும், இது இந்த கோவிலில் மட்டுமே இருக்கும் சிறப்பம்சமாகும்.  

மாற்றுரைவரைத்தீஸ்வரர் சுயம்பு லிங்கமாக இருக்கிறார். மேலும் இங்கு இருக்கும் நவக்கிரக சந்நிதியில் சூரியன் தன் மனைவியுடன் இருக்கிறார். மற்ற நவக்கிரகங்கள் எல்லாம் அவரை நிலையில் உள்ளனர்.

இங்கு இறைவியான பாலாம்பிகை அம்மன் உள்ளார். இவருக்கு ஆடிப்பூரம் மற்றும் நவராத்திரி நன்னாளில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கோவிலில் உள்ள சகஸ்ரலிங்கம் ஆதிமூல லிங்கமாகும், இவருக்கு வாஸ்து பரிகார நாளில் யாகம் வளர்த்து வேண்டிக்கொள்கின்றனர். 

திருச்சியில் இருந்து முசிறி செல்லும் வழியில் திருவாசி என்ற ஊர் உள்ளது. தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *