27 5 2019 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி அளவில் மத்திய பேருந்து நிலையம் ஸ்ரீனிவாசா ஹாலில் திருச்சி மாநகர் மாவட்ட மருத்துவ சமூக நல சங்கமும், ஜெய் அண்ட் ஜெய் குழும அறக்கட்டளையும் இணைந்து நடத்திய மாபெரும் கல்வி விழா EDUFEST-2025 சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு சங்கத்தின் அவைத்தலைவர் பா தர்மலிங்கம்தலைமையுறையாற்றினார்.விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு திருச்சி மாநகர் மாவட்ட மருத்துவர் சமூக நல சங்கத்தின் கௌரவத் தலைவரும் ஜெய் & ஜெய் குழும அறக்கட்டளையின் அறங்காவலர் சிங்கப்பூர் எஸ்.ஜெய், பள்ளி மாணவர்களுக்கு தேவையான உபகரணப் பொருட்களான பேக், நோட்டு புத்தகம் போன்ற 15 வகையான பொருட்கள் வழங்கினார்,
இதில் சுமார் 180 க்கு மேல் மாணவர்கள் பயனடைந்தனர். இதனைப் பெற்றுக் கொண்டு மாணவர்கள் சந்தோஷம் அடைந்தனர்.அரசு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மருத்துவர் சமுதாய மாணவர்களுக்கு பணத் தொகுப்பும் வழங்கப்பட்டது.
மேலும் நிகழ்ச்சியில், திருச்சி மாநகர் மாவட்ட மருத்துவர் சமூக நலச் சங்கத்தின் தலைவராக ரா செல்வராஜ் செயலாளராக ப.தர்மலிங்கம் அவர்களும் சமுதாயத்திற்கு தலைமை பொறுப்பேற்று 25 ஆண்டுகள் ஆவது ஒட்டி அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக வெள்ளி விழா கொண்டாடப்பட்டது, அப்போது அவர்களுக்கு வெள்ளி பதக்கமிட்டு, நினைவு பரிசும் வழங்கப்பட்டது விழாவிற்கு சிறப்பு விருந்தினராய் திருச்சி தேசிய கல்லூரியின் ஆங்கிலத்துறையின் உதவி பேராசிரியை திருமதி Dr. அனுசுயா ராமகிருஷ்ணன் Phd பங்கேற்று மாணவர்களுக்கு தன்முனைப்பு குறித்து சொற்பொழிவாற்றினார்.
வடக்கு மாவட்டம் ஸ்ரீரங்கம் நிர்வாகத்தின் செயலாளர் சுரேஷ், பொருளாளர் கலைமணி, ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.வெள்ளி விழா நாயகர்களை சங்கக் கவி திருவைகுமரன் பாராட்டி பேசினார் .
நிகழ்ச்சியின் முடிவில் பொருளாளர் முருகேசன் நன்றி உரை கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இளைஞர் அணியை சார்ந்த அ.சரவணக்குமார், ரா.சுப்ரமணியன், ம.செந்தில்குமார், அ.முருகேசன், N.பாண்டியராஜ்,Rk.ரங்கராஜ் , M.ஸ்டாலின், S.பாலகிருஷ்ணன், k.இளையராஜா, சதீஷ்குமார், குணசேகர் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments