திருச்சி மாவட்டம் முசிறி வட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் மோருப்பட்டி பகுதியில் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு சாக்கடையின் அருகினில் நடப்பட்டிருந்த இரும்பு மின்கம்பம் ஒன்று அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக அரிக்கப்பட்டு, சாக்கடையினுலேயே விழுந்துள்ளது. நல்வாய்ப்பாக அன்று நடந்த அசம்பாவிதம் காரணமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.

அதன்பின் தொடர்ந்து அப்பகுதி மக்கள் பேரூராட்சி மற்றும் மின்சார துறையினரிடம் பலமுறை சென்று கோரிக்கைவிடுத்தும், மாறி மாறி பதில் கூறினாலும் அந்த மின் கம்பத்தை அகற்றும் பணியை மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் ஒருமுறை மின்சார துறையில் இருந்து சாக்கடைக்குள் விழுந்த மின்கம்பத்தை அகற்ற வந்த மின்சார துறையினர் அதனை சாக்கடையில் இருந்து மேலே எடுத்து போடாமல், சாக்கடையின் வலது புறத்தில் மாற்றி வைத்துள்ளனர்.

இதனால் கழிவு நீர் செல்வதில் பிரச்சனை ஏற்படுவதுடன், அந்த கம்பத்தில் இருந்த தெருவிளக்கும் இல்லாமல் இரவு நேரங்களில் இருட்டாகவே இருக்கும் நிலை உள்ளது. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலையாக உள்ள நிலையில் இங்கு பள்ளியும் இருப்பதால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments