விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவனின் சகோதரி பானுமதி அவர்களின் நினைவு நாளையொட்டி அரியலூர் மாவட்டம், அங்கனூரில் நடைபெற உள்ள நினைவு தினம் அனுசரிக்க இருப்பதால் இந்நிகழ்வில் பங்கு கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை திருச்சி விமான நிலையம் வருகை தந்தார். பின்னர் சாலை மார்க்கமாக அங்கனூர் சென்றார்.
விமான நிலையத்தில் செய்தியளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்
தமிழகத்திலும் மாநிலங்களிலும் அதிகரித்து வரும் தனி சட்டம் இயற்ற வேண்டும்வலியுறுத்து வருகிறோம். நாடாளுமன்றத்தில் இது குறித்து பேசியும், உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளோம்.தேசிய அளவில் ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் நடக்கின்ற இந்த கொடூரமான படுகொலைகளை தடுக்க சட்டம் வேண்டும் என்று ஜனநாயக சக்திகள் பரவலாக குரல் கொடுத்து வருகின்றனர்.
ஆனால் இந்தியா ஒன்றிய அரசு பொறுப்பெடுத்தவில்லை.
உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் தடுப்பதற்கு உரிய வழிமுறைகளை வலியுறுத்து தீர்ப்பளித்துள்ளது.
சட்டபேரவையில் நிறைவேற்றும் வகையில் அதற்குரிய தடுப்பு விதிகளை பயன்படுத்த வேண்டும்.
காவல்துறையினருக்கு வழிகாட்டுதலை சில நெறிமுறைகளை வரையறுத்து உச்சடிக்க மன்றம் தீர்ப்பளித்துள்ளது 2018ல்
அந்தத் தீர்ப்பையும் மாநில அரசின் கட்டுப்பாட்டையில் உள்ள காவல்துறையினர் நடைமுறைப்படுத்துவதில்லை என்பது வேதனை அளிக்கிறது. இச்சூழலில் இச்சட்டம் இயக்குவதற்கு மாநில அரசுகளுக்கும் பொறுப்பு இருக்கிறது, அதிகாரம் உள்ளது. எனவே, தமிழக அரசு ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும்.
தமிழக அரசு ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என வலியுறுத்தி ஆகஸ்ட் 9ம்தேதியும், 11ஆம் தேதி ஆகிய இரு நாட்களிலும் தமிழ்நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தமிழக முதல்வர் இது குறித்து ஏற்கனவே தேர்தல் வாக்குறுதியில் சட்டம் ஏற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளபடும் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசு மற்ற மாநில அரசுகளுக்கு முன்மாதிரியாக ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் வேண்டுகோள் விடுகிறோம்.
சென்னையில் 9ம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்க உள்ளேன்.
கிங்டம் திரைப்படம் ஈழத் தமிழர்களை இழிவு படுத்துவதாக கூறப்படுகிறது என்ற கேள்விக்கு
படம் இதுவரை நான் பார்க்கவில்லை பார்த்துவிட்டு பிறகு சொல்கிறேன்.
நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர் விவாதமே இல்லாமல் எல்லா மசோதாவையும் நிறைவேற்ற வேண்டும் என அமைச்சர் கிரண்ரெஜி சொல்லி இருக்கிறார் என்ற கேள்விக்கு
பீகாரில் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. அதில் ஏராளமான தில்லுமூலம் நடைபெறுவதாக தெரிகிறது.
குறிப்பாக பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது, வெளி மாநிலங்கள் உள்ளவர்களுக்கு பீகார் மாநிலத்தில் வாக்காளர்களாக சேர்த்து அவர்களை வாக்களிக்க செய்வது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் செய்திருக்கிறார்கள்.
அதற்கு தேர்தல் ஆணையம் துணை போகிறது என்கிற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் இந்தியா கூட்டணி உள்ள கட்சிகள் யாவும் வலியுறுத்தி வருகிறது.
இதனை நாடாளுமன்றத்தில் குறிப்பாக விவாதிக்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை ஜூலை 21ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து விவாதிக்க வேண்டும் கோரிக்கை விடுத்தும் ஆளும்கட்சி அதை ஏற்க மறுக்கிறது.அந்தக் கோரிக்கைகளை முன்னிறுத்தி தொடர் போராட்டங்களை ஈடுபட்டு வருகிறோம்.
அவர்கள் அதனை ஏன் விவாதிக்க தயங்குகின்றனர்.
தமிழகத்திலும் அப்படி செய்வதற்கு சில முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற தகவல்கள் வெளியாகின்றனர்.தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை சிதறுகிறது.
எதுவும் நடக்கவில்லை என்றால் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார் தேர்தல் கமிஷன் பாஜகவுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறது என்ற கேள்விக்கு
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு இருக்கிறது. அது சுதந்திரமாக இயங்கவில்லை
பாஜகவின் முழுமையான கட்டுப்பாட்டில் எனது ஆணையம் சிக்கி உள்ளது.
பாஜக எந்த தில்லுமுல்லையும் செய்வார்கள்.
பீகாரில் இதை ஒரு பரிச்சாத்தமாக இதை வெளிப்படையாக செய்கிறார்கள்.
சிஏஏ சட்டத்தை நடைமுறை படுத்துகிற ஒரு நடவடிக்கையாக இது இருக்கிறது. வாக்காளர்களா
இருப்பவர்கள் தாங்கள் இந்த நாட்டின் குடிமகன் என்பதை ஆதாரத்தோடு உறுதிப்படுத்திய பிறகு தான் வாக்காளர் பட்டியலில் இடம்பெற முடியும் என்கிற நடவடிக்கை இவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இது மிகுந்த ஆபத்தானது
பாஜகவினர் அமைச்சர் பதவி தருவதாக பலரை அழைப்பதாக கூறப்படுகிறது உங்களை வைத்துள்ளார்களா என்ற கேள்விக்கு
எனக்கு எந்த விதமான அழைப்பு வரவில்லை.
அனைத்து நாடுகளின் தூதரகங்கள் உள்ள பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த கழுத்தில் இருந்த சங்கலியை பதட்டம் இல்லாமல் ஒருவர் எடுத்துக் கொண்டு சென்று இருக்கிறார்.
இது குறித்து புகார் கொடுத்தும் அதனை ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை.
தலைநகர் புதுடெல்லியில் பாதுகாப்பு உள்ள பகுதி இது போன்ற சம்பவம் நடந்திருக்கிறது.
நாட்டின் மீதான நன்மதிப்பை உலக அரங்கில் வெளிநாடுகளில் வரக்கூடியவர்களிடையே களங்கத்தை உருவாக்க கூடியதாக இருக்கிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்னும் கூட்டணியாகவே உருவாகவில்லை. அதிமுக பாஜக இரண்டு கட்சிகள் இணைந்து இருக்கிறது அவ்வளவுதான். அவர்களுக்கு இடையில் ஒருமித்த கருத்து உருவாகவில்லை.
திமுக கூட்டணி சலசலப்பு சிதறப்போகிறார்கள் என்ற தங்கள் ஆசைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
ஆனால் அவர்கள அணியில் இருந்தவர்கள், ஆதரவாக இருந்தவர்கள் தொடர் பயணிக்க வாய்ப்பு இருக்கின்றஎன்று நம்பிக் கொண்டிருந்த நிலையில்
அவர்களே வெளியேறுகிறார்கள் என்றால் அந்த கூட்டணியின் உறுதிப்பாடு எப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
அனைத்துக் கட்சியிலும் கொள்கை இருக்கிறது ஆனால் திமுகவில் கொள்கை இல்லை என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார் என்ற கேள்விக்கு
அவர் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார் மக்கள் தான் அதை தீர்மானிக்க வேண்டும்
வட மாநிலத்தவர்கள் லட்சக்கணக்கில் தொழிலாளர்களாக பணியாற்றிக் கொண்டிருக்கிற சூழலில் அவர்களை வாக்காளர்களாகஉடனடியாக சேர்ப்பதற்கு முயற்சிகள் நடப்பதாக வருவதாக தகவல்கள் வந்து கொண்டுள்ளது.
இது குறித்து தீவிரமாக விவாதிக்க வேண்டிய தேவை இருக்கிறது.
முதல்வர் அனைத்து கட்சி கூட்டம் கூட்டி இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என தெரிவித்தார்.
பேட்டியின் போது மாவட்டச் செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன். திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கிட்டு ஆகியோர் உடன் இருந்தனர்.
Comments