Site Logo mobile
Search Icon
Mobile Gif
Articles

பணி திறனை அதிகரிப்பதற்கான அத்தியாவசிய வழிமுறைகள் !!

நாம் எந்த வேலையை செய்தாலும் அதில் நமது திறனை காட்டுவது மிக முக்கியமானது. வேலைக்கு சேர்ந்தோமா, கொடுத்த வேலையை செய்தோமா என்பதெல்லாம் நம்மை முன்னேற்றத்துக்கு கொண்டு செல்லாது. நம் திறனை காட்டுவது, அதற்காக நாம் முயற்சி செய்வதெல்லாம் தான் நம்மை பணிசூழலை தாண்டி வாழ்கையிலேயும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த பணிதிறனை நாம் மேம்படுத்துவது அவசியம் என்பதால், அதனை எப்படி அதிகரிப்பது என்பது குறித்து விளக்குகிறார் தனியார் நிறுவன மனிதவள மேம்பாட்டு துறை நிபுணர் விஜிலா ஜாஸ்மின்….. அதிகமில்லை சில எளிய வழிகளை நாம் மேற்கொள்ளும்போது நம்முடைய பணி சூழலில், நம் திறனை அதிகரிக்க அது நமக்கு உதவி புரியும். அதில் முதலாவதாக கிசுகிசுப்பு இல்லாமல் இருப்பது, மற்றவரக்ளை பற்றி கிசுகிசுப்பு பேச நேரம் எடுத்து கொள்ளும் போது நம்மை பற்றி நாம் யோசிக்க மறந்துவிடுவோம்.

இது நேரவிரயம் மட்டுமல்ல நம்முடைய மனநிலைமையையும் பாதிக்கும். தேவையான இடைவெளிகள், நான் ஓய்வெடுக்கவே மாட்டேன், வேலை முடிந்தால் தான் இடைவெளி எடுப்பேன் என்றில்லாமல், செய்து முடிக்க வேண்டிய பணிகளுக்கு இடையில் அடிக்கடி இடைவெளி இல்லாமல் குறிப்பிட்ட நேரத்திற்கு தேவையான அளவு இடைவெளி எடுத்து கொள்வது முக்கியம். உடல், மனம் என எதனை சார்ந்த பணியாக இருப்பினும் தீவிர ஆழ்ந்த மூச்சு எடுத்து கொள்வது முக்கியம்.

இது நம்மை ரிலாக்ஸ் செய்ய வைக்க உதவும். சிலர் பணிசூழலில் பெரும்பாலும் செல்போனை பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருப்பர், இதனை தவிர்த்து பணிசூழலில் ஜீரோ மொபைல் பயன்பாடு என்பதை மேற்கொள்வது நல்லது. பணிசூழல் சார்ந்த கூட்டங்களை தவிர மற்ற கூட்டங்களை குறைக்கவும், இது நேரவிரயத்தை குறைக்கும், கவனம் சிதறாமல் இருக்க உதவும்.

பணிநேரங்களில் மின்னஞ்சல்களை பார்ப்பதற்கு குறிப்பிட்ட மணிநேரங்களை மட்டுமே செலவிடுங்கள், சிலர் சில நிமிடங்களுக்கு ஒருமுறை அதனை பார்ப்பதே பணி என்பது போல் செயல்படுவர் அதனை தவிர்பபது நல்லது. குறுகிய காலம் மற்றும் நெடுங்காலம் என தனி தனியாக பிரித்து அவற்றில் செய்யவேண்டிய மூன்று முக்கியமான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அதை நிறைவேற்றுங்கள்.

சரியான நேரத்தில் உங்கள் வேலையைத் தொடங்கவும், அதேபோல சரியான நேரத்தில் வேலையை முடித்துவிட்டு வெளியேறவும் தயாராக இருங்கள். உங்களது ரொம்ப முக்கியமானதாக இல்லாத நிலையில் அலுவலக நேரத்திற்குப் பிறகு மீட்டிங் ஐ திட்டமிட வேண்டாம். அதேபோல பணித்திறன் குறித்த அனைத்தையும் அதிகாலை 4 மணி முதல் காலை 6 மணி வரை இருக்கும் நேரத்தில் பிளான் செய்வது நல்லது. இது அமைதியான மன நிலையில், உங்களை யோசிக்க வைக்கும் என்கிறார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *