நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சேரன் (20). இவர் கல்லூரி படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு நேர்த்தி கடன் செலுத்தி அம்மனை தரிசனம் செய்ய வந்துள்ளனர். இந்நிலையில் தனது நண்பருக்கு மொட்டை அடித்து சாமி தரிசனமும் முடித்துவிட்டு கோயில் வளாகத்தில் கோயில் பிரசாதம் சாப்பிட்டபோது செல்போனை கீழே மறந்து வைத்துவிட்டு சென்றுள்ளார்.
இதையடுத்து கோவில் வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட நொச்சியம் அடுத்துள்ள துடையூர் பகுதியை சேர்ந்த கண்ணகி என்பவர் ஒரு செல்போன் கிடப்பதை கண்டு எடுத்து அப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்துள்ளார். பின்னர் அந்த செல்போனை கோயில் கண்காணிப்பார் ஸ்டாலினிடம் கண்ணகி ஒப்படைத்தார்.
மேலும் விலை உயர்ந்த செல்போன் என்பதால் இணை ஆணையர் பிரகாஷ் தகவல் ஒலிபெருகி மூலம் செல்போன் பற்றிய தகவலை வெளியிட்டார். இதையடுத்து செல்போனை தவறவிட்ட சேரன் கோயில் நிர்வாக அலுவலகம் சென்று அது தனது செல்போன் என்ற உறுதி படுத்திய பின் மாணவனிடம் கோயில் இணை ஆணையர் பிரகாஷ், கோவில் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மற்றும் செல்போனை மீட்டு கொடுத்த துப்புரவு பணியாளர் கண்ணகி ஆகியோர் விலை உயர்ந்த செல்போனை மாணவனிடம் ஒப்படைத்தனர்.
பிறர் பொருளுக்கு ஆசைப்படாத துப்பரவு பணியாளர் கண்ணகியின் இச்செயல் கோயில் இணை ஆணையர் மற்றும் நிர்வாகத்தினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி கண்ணகியை பாராட்டி சன்மானம் வழங்கினர். இந்நிகழ்வின்போது கோவில் இணை ஆணையர் பிரகாஷ், கோவில் கண்காணிப்பாளர் ஸ்டாலின் குமார், நல்லுக்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments