காந்தி மார்க்கெட்டை திறக்க இடைக்கால தடை நீடிப்பு - அடுத்த மாதம் 13ம் தேதி விசாரணை!!

காந்தி மார்க்கெட்டை திறக்க இடைக்கால தடை நீடிப்பு - அடுத்த மாதம் 13ம் தேதி விசாரணை!!

திருச்சி காந்தி மார்க்கெட் திறக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீடித்து அடுத்த மாதம் 13-ம் தேதி விசாரணையை ஒத்திவைத்தது மதுரை உயர்நீதிமன்ற கிளை.

திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் அருகே கள்ளிக்குடி என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள காய்கறிகள், பழங்கள் மலர்களுக்கான மத்திய வணிக வளாகம் சுமார் 77 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இதில் 19 வரிசைகள் அடங்கிய 1000 கடைகள் கட்டப்பட்டது. இதனை 2017ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

Advertisement

அப்போது திறக்கப்பட்ட புதிய மார்க்கெடுக்கு காந்தி மார்க்கெட் வியாபாரிகள் வர மறுத்ததால் மீண்டும் மூடப்பட்டு, திரும்பவும் 2018 ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி திருச்சி அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் திறந்து வைத்தனர். அப்போது பொதுமக்கள் போதுமான வருகை இல்லாததாலும் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் வர மறுத்ததால் மீண்டும் மூடப்பட்டது.

https://youtu.be/KHZ3W-BpWV0
Advertisement

இந்நிலையில் இந்த கொரோனா காலகட்டத்தில் திருச்சி காந்தி மார்க்கெட் ஜி கார்னர் பகுதிக்கு மாற்றப்பட்டு, தற்போது உள்ள மார்க்கெட் தடை செய்யப்பட்ட பகுதியாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக கூட கு.ப. கிருஷ்ணன் தலைமையில் புதிய காந்தி மார்க்கெட்டை திறக்க வேண்டும் என்று மனித வளர் சங்கம் சார்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.அதேபோல காந்தி மார்க்கெட் பற்றியும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி கள்ளிக்குடி காந்தி மார்க்கெட் விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

இதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கு முடியும் வரை காந்தி மார்க்கெட்டை திறக்க கூடாது எனவும் புதிய கள்ளிக்குடி மார்க்கெட்டை திறப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அடுத்தகட்டமாக வரும் மாதம் செப்டம்பர் 14ம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரும் எனவும் நீதிபதி சத்யநாராயணன் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் காந்தி மார்க்கெட் திறக்க இடைக்கால தடை நீட்டித்து அடுத்த மாதம் 13ஆம் தேதி விசாரணை ஒத்தி வைத்துள்ளது மதுரை உயர்நீதிமன்ற கிளை. இதற்கு இடையில் கள்ளிக்குடி மார்க்கெட்டுகளில் விற்பனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.