மேட்டூரில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் வாய்க்கால் கடைமடைகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை என கூறப்படுகிறது. கடைமடை வரை தண்ணீர் செல்வதை கண்காணிக்க பொதுப்பணித்துறையில் நீர்வளத்துறை லஸ்கர்கள் ( குமாஸ்தாக்கள் ) இருந்தனர். ஆனால் இப்போது அவர்கள் பணியில் இல்லை.

ஆகவே மீண்டும் அவர்களை கடைமடை வரை தண்ணீர் செல்வதை உறுதி செய்ய வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள், திருச்சி கண்டோன்மெண்ட் நீர்வளத்துறை நிர்வாக பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.


அப்போது நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் வாகனத்தை வழி மறித்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அலுவலக நுழைவாயில் கேட்டைஇழுத்து மூடி, பூட்டு போட முயன்றனர் உடனே பாதுகாப்புக்கு வந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அதைத் தொடர்ந்து அலுவலக வளாகத்தில் அய்யாக்கண்ணு, மைக்கேல், உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நீர்வளத்துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது இதைத் தொடர்ந்து அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று ஆட்சியர் பிரதீப் குமாரை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments