திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகே சிக்னலில் திருச்சி சிந்தாமணி பகுதியை சேர்ந்த கலைவேந்தன் அவரது மகன் ரோவித் இருவரும் இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தனர் பின்னர் வந்த தனியார் பேருந்து ஒலி எழுப்பிய பொழுது இருசக்கர வாகனத்தை விட்டு இறங்கி தனியார் பேருந்து ஓட்டுனரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்த பேருந்து கரூரிலிருந்து திருச்சி வந்து கொண்டிருந்தது. கிருஷ்ணமூர்த்தியிடம் கலைவேந்தன் அவரது மகன் ரோவித் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். தனியார் பேருந்தில் நடத்துனர் ராமசாமி அவர் இறங்கி வந்து கேட்ட பொழுது ஆபாச வார்த்தைகளை திட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. தந்தையும் மகனும் இணைந்து ஓட்டுனர் கிருஷ்ணமூர்த்தியை இழுத்து போட்டு அடித்து அருகில் ஒரு அரசு பேருந்து வரும்பொழுது அவர் அதில் விழும் நிலை ஏற்பட்டு சாலையில் உருண்டு பிரண்டு மூவரும் சண்டையிட்டு கொண்டனர்.
இதில் ஓட்டுனர் கிருஷ்ணமூர்த்திக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது மேலும் நடத்துனர் ராமசாமியும் காயம் அடைந்துள்ளார் இருவரும் தற்பொழுது திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் நான்கு பேரும் சண்டையிட்டதால் அங்கு வந்த சில வாகன ஓட்டிகள் இவர்கள் சண்டையை விலக்கிவிட்டு உள்ளனர். தந்தை மகனும் சேர்ந்து தனியார் ஓட்டுநர் நடத்துனரே நடுரோட்டில் ஆபாச வார்த்தைகளில் திட்டியாதாகவும் இழுத்துப் போட்டு அடித்து காயம் ஏற்படுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அடி வாங்கிய ஆத்திரத்தில் தனியார் பேருந்து ஓட்டுனர் பேருந்து சுத்தம் செய்யும் கட்டையை எடுத்துக் கொண்டு வந்து மீண்டும் தந்தை,மகனை தாக்க முற்பட்ட பொழுது மூவரும் சாலையில் ஒருவரை ஒருவர் மீண்டும் தாக்கி கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments