திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த பச்சமலை பகுதியில் உள்ள செங்காட்டுப்பட்டி சோ்ந்த ராசு மகன் சீனிவாசன் (64). இவரது மகன் சின்னத்தம்பி (36). இவர்கள் இருவரும் எரிசாராயம், நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் துறையூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளா் கதிரேசன் தலைமையிலான போலீஸாா் அப்பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனா். அப்போது, ஒரு லிட்டா் கள்ளச்சாராயம் மற்றும் நாட்டுத் துப்பாக்கியுடன் இருந்த சீனிவாசன், சின்னத்தம்பி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments