திருச்சியை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் - புகார் கொடுத்தும் கண்டுகொள்ளாத "1098" அதிகாரிகள்!!

திருச்சியை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் - புகார் கொடுத்தும் கண்டுகொள்ளாத "1098" அதிகாரிகள்!!

திருச்சி துவாக்குடி அடுத்துள்ள  தேவராயநேரி நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் கமலா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பெல் நிறுவன வளாகத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா தொற்று பரவலை காரணமாக பள்ளிகளை அரசு  இன்னும் திறக்கவில்லை. இந்நிலையில் தேர்ச்சி பெற்று 8 ஆம் வகுப்புக்கு செல்ல முடியாமல் கமலா வீட்டில் இருந்து வந்தார்.

https://youtu.be/hO6NVGIYrpo
Advertisement

இவரது தாய் மாமன் அருள்பாண்டி (வயது 28)
தேனி மாவட்டம் தென்றல் நகரில் வசித்து வந்தார். அவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த மணப்பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் காதல் ஏற்பட்டிருக்கிறது. அப்பெண் அருள்பாண்டியை திருமணம் செய்துக்கொள்ள மறுத்து , தனது காதலருடன் தேனியில் சென்று விட்டார்.

உடனே அருள்பாண்டி தனது உடன்பிறந்த சகோதரி மகேஷ்வரியை தொடர்புக்கொண்டு திருமணம் தடைப்பட்ட விபரத்தை சொல்லியிருக்கிறார். பின்னர், மகேஷ்வரி தனது மகள் கமலாவை அருள்பாண்டிக்கு திருமணம் செய்துக்கொடுக்க முடிவெடுத்தார். இதனை தொடர்ந்து திருச்சியில் இருந்த கமலாக கட்டாயப்படுத்தி தேனிக்கு அழைத்துச் சென்றனர். தேனி மாவட்டம் தென்றல் நகரில் அருள்பாண்டி சிறுமியை சட்டவிரோதமாக கட்டாய திருமணம் செய்துக்கொண்டார்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக, அரசு கொடுத்துள்ள 1098 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்புக்கொண்டு புகார் கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதிமக்கள் தெரிவித்தனர்.