Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் முழு ஊரடங்கு வழக்கு – ஆட்சியர் மற்றும் ஆணையர் 27 ஆம் தேதி காணொலியில் ஆஜராக உத்தரவு!

திருச்சியில் முழு ஊரடங்கு அமல்படுத்தினால் தான் கட்டுப்படுத்த முடியும் என்று ஒரு புறமும், மறுபுறமும்
முழு ஊரடங்கு அமல்படுத்தினால் அன்றாட வாழ்க்கையை எப்படி நடத்துவது என ஊரடங்கு வேண்டாம் என குரல்கள் ஒலித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் திருச்சியில் முழு ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்த உத்தரவிடக் கோரி திருச்சியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ராஜகோபால், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த மாதம் முறையீடு செய்துள்ளனர்.

மதுரையில் கொரோனா பாதிப்பு அதிகமான போது உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கு எடுத்து கொண்டதை போல, இந்த மனுவை எடுத்து விசாரிக்க வேண்டும் எனவும், மருத்துவர்கள் சங்கம் வேண்டுகொளை வைத்து ராஜகோபால் கோரிக்கை‌ வைத்தார்.

Advertisement

இந்நிலையில் இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் திருச்சியில் முழு ஊரடங்கு அமல் படுத்துவது குறித்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் பெஞ்ச் வழக்கை விசாரித்தது திருச்சியில் கொரோனா நோய் தொற்றுயை கட்டுபடுத்த எந்த விதத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, கொரோனா சிகிச்சை பற்றி எந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, பரவலை கட்டுப்படுத்துவதற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன .மருத்துவமனை படுக்கை வசதிகள்,மாதிரி முடிவுகள் எவ்வளவு நாட்களில் கொடுக்கபடுகிறது உள்ளிட்ட கேள்விகளை நீதிபதிகள் கேட்டுள்ளனர்.

இதுகுறித்து விளக்கமளிக்க வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி அன்று அடுத்த கட்ட விசாரணையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் ஆகிய இருவரும் காணொலி மூலமாக ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் ஐ.எம்.ஏ தாக்கல் செய்த மனுவில் திருச்சியில் 2 வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என குறிப்பிட்ட நிலையில் இதனை வைத்து வாதம் 27ஆம் தேதி அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *