திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள படைகலன் தொழிற்சாலைகளில் எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மத்திய அரசு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி போராட்டத்தில் ஈடுபடும் சங்களுக்கு ஆதரவாக செயல்படுவது என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் எச் இ பி எஃப் தொழிற்சாலைகள் உள்ளது. இது மத்திய அரசின் பாதுகாப்பு படை களன் தொழிற்சாலைகள் ஆகும்.இந்த தொழிற்சாலைகளில் உள்ள எம்ப்ளாயிஸ் யூனியன் சார்பில் இன்று காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு துப்பாக்கி தொழிற்சாலையில் காந்தி உருவ பேனருக்கு மாலை அணிவித்து மலர் தூவியதோடு
எம்ப்ளாய்ஸ் யூனியன் தலைவர் ஜெயபாலன் தலைமையிலும் எச் இ பி எஃப் தொழிற்சாலையில் எம்ப்ளாயீஸ் யூனியன் தலைவர் விஜயன் தலைமையிலும் மத்திய அரசு புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வதோடு புதிதாக அறிவித்துள்ள யுபிஎஸ் திட்டத்தையும் ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராடும் எந்த சங்கமாக இருந்தாலும் அதனுடன் இணைந்து போராடுவது என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பின்னர் துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் எச் இ பி எஃப் தொழிற்சாலை முன்பு மத்திய அரசை கண்டித்து கோசமிட்டனர். இதில் துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் எச் இ பி எஃப் தொழிற்சாலை எம்ப்ளாயீஸ் யூனியன் தொழிலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்
அறிய…
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments