நேற்றிரவு இரவு திருச்சி மாநகரி. பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. திருச்சி இபி ரோடு சத்தியமூர்த்தி நகரில் மண் வீட்டின் சுவர் மழையில் நனைந்து ஆபத்தான நிலையில் இருந்தது. இந்நிலையில் இன்று மதியம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உடல் நசங்கி 11 வயது சிறுமி கார்த்திகா என்பவர் உயிரிழந்தார்.
இவருடன் விளையாடிக் கொண்டிருந்த மற்ற மூன்று சிறுமிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
வீட்டில் சுவர் இடிந்து விழுந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுமி உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உயிரிழந்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments