படியில் பயணம் நொடியில் மரணம் என்ற வாசகம் அனைத்து பேருந்துகளின் ஒட்டப்பட்டு இருக்கும் ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில் போக்குவரத்து துறையும் பின்பற்றுவதில் பொதுமக்களும் லட்சம் காட்டி வருகின்றனர். பேருந்து படிக்கட்டில் பயணம் செய்வது மாணவர்களின் ஒரு பேஷனாக உள்ளது இதை தடுக்க பல்வேறு விழிப்புணர்வுகளை அரசு ஏற்படுத்தி வருகிறது.
இதில் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் திருச்சி நீதிமன்ற பேருந்து நிறுத்தத்தில் 20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பேருந்து படிக்கட்டில் நின்றவாறு பயணம் செய்து வருவது தொடர்ந்து நடைபெற்று நடந்து கொண்டிருக்கிறது. காலை 8:00 மணி முதல் 9 மணி வரை கல்லூரி செல்லக்கூடிய மாணவிகள் அதிக அளவில் இந்த பேருந்து நிறுத்தத்திலிருந்து கல்லூரிக்கு செல்ல பேருந்துக்காக காத்திருக்கிறார்கள்.
குறிப்பிட்ட நேரத்தில் வரும் பேருந்துகள் அதிகளவு கூட்டம் இருப்பதால் மாணவிகள் ஆபத்தை உணராமல் படிக்கட்டில் நின்றவாறு பயணம் மேற்கொள்கின்றனர். இதனை போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் படியில் பயணம் செய்தால் ஏற்படும் விபரீதம் குறித்து மாணவிகள் உணர்ந்து படிக்கட்டில் பயணத்தை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO






Comments