நேபாளத்தின் பொக்காரா நகரில் உள்ள ரங் ஷாலா ஸ்டேடியத்தில், 2025 ஜூலை 24 முதல் 28 வரை நடைபெற்ற YSPA (Youth Sports Promotion Association of India) அமைப்பின் சார்பில் இந்தோ நேபாள சர்வதேச சாம்பியன்ஷிப் 2025 சிறப்பாக நடைபெற்றது.
இந்தத் தொடரில் தடகளம், ஃபுட்சல், குத்துச்சண்டை, பூப்பந்து, கராத்தே, ஜூடோ, சிலம்பம், செஸ், கபடி, யோகா உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் இடம் பெற்றன.இந்த போட்டியில் தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், தாளக்குடி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி திரு. கேசவன் அவர்களின் மகன், 10 கிலோமீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
அவினேஷ், தனது துடிப்பும் முயற்சியும் மூலமாக மிகுந்த போட்டியிடையே சாதனையைப் பெற்றுள்ளார். பொருளாதார ரீதியாக பின்னோட்டத்தில் உள்ள குடும்பத்தில் பிறந்த இவர், தனது முயற்சியால் மாநில மக்களுக்கு மட்டுமன்றி, நாடு முழுவதும் முன்மாதிரியாக உள்ளார்.இவ்விதமான சாதனைகள் மேலும் பல இளைஞர்களுக்கு ஊக்கமாக அமையும் என்பது உறுதி
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
தாய்மண்ணுக்கு தங்கம் – நேபாளத்தில் தமிழக வீரர் வரலாற்றுச் சாதனை!

Comments