திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு நாடுகளில் இருந்தும் திருச்சி விமான நிலையத்திற்கு விமான சேவைகள் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் கடத்து வருவது தொடக்கதையாக உள்ளது.

இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ஸ்கூட் மற்றும் ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்த பயணிகளிடம் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்பொழுது சந்தேகத்திற்கிடமான பயணிகள் மற்றும் அவர்கள் உடமைகளை சோதனை செய்த போது துளையிடும் இயந்திரம் காய்கறி நறுக்கும் கருவி, சாவி உள்ளிட்டவைகளில் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட 33 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 546 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்
அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments