திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே காட்டுப்புத்தூர் காவல் சரகத்திற்குட்பட்ட பெரிய நாச்சிப்பட்டி பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக நான்கு டிப்பர் லாரிகளில் கிராவல் மண் கடத்துவதாக காட்டுப்புத்தூர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி நிகழ்விடத்திற்கு சென்று காட்டுப்புத்தூர் போலீசார் சோதனை செய்ததில்
சட்டவிரோதமாக நான்கு டிப்பர் லாரி முழுவதும் கிரவல் மண்ணுடன் இருந்ததை போலீசார் கைப்பற்றினர், டிப்பர் லாரியில் இருந்த நான்கு பேர் கைது, நான்கு டிப்பர் லாரியில் கிராவல் மண்ணுடன் டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து காட்டுப்புத்தூர் காவல் நிலைய பகுதியில் நிறுத்தி வைத்தனர், தொடர்ந்து நான்கு பேரை விசாரணை செய்ததில் நான்கு டிப்பர் லாரிகளில் சட்டவரகி ராவல் மண் கடத்திய தொட்டியம் அருகே வரதராஜபுரத்தைச் சேர்ந்த பிரபாகரன் 32, சக்திவேல் 40 மற்றும்
தொட்டியம் அருகே மகேந்திரமங்கலத்தைச் சேர்ந்த மாணிக்கஜோதி 39, பார்த்தசாரதி 33 ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர், மேலும்கிராவல் மண் கடத்திய நான்கு டிப்பர் லாரிகளையும் பறிமுதல் செய்து கிராவல் மண் எதற்காக கடத்தப்பட்டது, லாரியின் உரிமையாளர்கள் குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments