திருச்சி மாவட்டத்தில், 6 இடங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது என மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் S.பிரகாசம் தெரிவித்துள்ளார்.
இவர் வெளியிட்ட அறிக்கையில்….. திருச்சி மாவட்டத்தில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி துறையூர் கோட்ட அலுவலகத்திலும், 4 ஆம் தேதி முசிறி கோட்ட அலுவலகத்திலும், 8ம் தேதி லால்குடி கோட்ட அலுவலகத்திலும், 11ஆம் தேதி ஸ்ரீரங்க கோட்ட அலுவலகத்திலும், 18ம் தேதி திருச்சி கிழக்கு கோட்ட அலுவலகத்திலும்,
22ம் தேதி திருச்சி மணப்பாறை கோட்ட அலுவலகத்திலும் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இதில், பொதுமக்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…… https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn







Comments