தீபாவளி முன்னிட்டு நகரின் பல பகுதிகளில் ஸ்பீக்கர் பாக்ஸ் மூலமாக விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது.
இவை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க வேண்டும். ஆனால் தற்போது விளம்பரம் செய்பவர்களோ எவற்றையும் காதில் வாங்காமல் பள்ளிகள், மருத்துவமனை, கோவில்கள் பக்கத்தில் கட்டிவிட்டு அதிக சத்ததில் விளம்பரம் செய்கிறார்கள்.
உதாரணமாக தென்னூர் பகுதியில் உள்ள சுப்பையா பள்ளி ஒன்றின் மேலே ஸ்பீக்கர் கட்டி விளம்பரம் செய்வதால் படிக்க முடியாமல் மாணவர்களும் ஆசிரியர்களும் சிரமப்படுகின்றனர்.
அதேபோல் தென்னூர் விஸ்வநாதபுரம் சிவன் கோவில், தென்னூர் உக்கிரகாளி அம்மன் கோவில் பக்கத்தில் கட்டி கோவிலுக்கு வரும் பக்தர்கள் இறைவனை நிம்மதியாக தரிசிக்க முடியாமல் செய்து உள்ளனர்.
ஆகவே இவற்றுக்கு அனுமதி கொடுத்த மாநகராட்சி, காவல்துறை உள்ளிட்டோர் உடன் நடவடிக்கை எடுத்து பள்ளி மாணவர்கள் பாதிக்கா வண்ணமும், கோவில் அருகே உள்ளவற்றை அகற்றி உதவிட வேண்டும் என அப்பகுதி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். நடவடிக்கை எடுப்பார்களா?
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments