காலாண்டு விடுமுறையின்போது அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டிருந்தார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உத்தரவைமீறி அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொகுதிக்குட்பட்ட, திருச்சி பொன்மலைப்பட்டி ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு வகுப்புகள் இன்று நடத்தப்பட்டு வருகிறது.

10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், மாணவிகள் தவறாது பள்ளிக்கு வந்துவிடவேண்டும் எனவும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியை எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் கடந்த 27ஆம் தேதி நிறைவடைந்ததுடன்,

அக்டோபர் ஆறாம் தேதி வரை பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments