Site Logo mobile
Search Icon
Mobile Gif
Articles

உற்பத்தி அதிகம் – விற்பனை குறைவு – விஜயதசமி நாளான இன்று தொழில் கணக்குகளை பார்ப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்?

விஜயதசமி என்றாலே வெற்றி தரும் நாள். நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இறுதியில் ஆயுத பூஜை கொண்டாடப்படும், அப்போது ஆயுதங்கள், புத்தகங்கள், நிறுவனங்களின் கணக்கு வழக்கு வரவு செலவு புத்தகங்களை அனைத்தையும் வழிபட்டு வைத்துவிட்டு பத்தாம் நாளான விஜயதசமி இன்று துவங்கினால் வெற்றி தரும் நாளாக அமையும் என்பது நம்பிக்கை!

Advertisement

அந்த வகையில் விஜயதசமி நாளான இன்று நிறுவனங்களில் பழைய வரவு செலவு புத்தகங்களை வைத்து மீண்டும் புதிதாக வரவு செலவு கணக்குகளை இன்று தொடங்கினால் வரலட்சுமி வருவாள் என்பது ஐதீகம். ஆனால் இந்த வருடம் விஜயதசமி நாளான இன்று கொரோனா காரணமாக கடந்த 7 மாதங்களாக வணிகம் பாதிக்கப்பட்ட நிலையில் திருச்சியில் வணிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பற்றிய சிறப்பு தொகுப்பு தான் இது!

கடந்த 7 மாதங்களாக நோய் தொற்றினால் பலரும் பெரிதும் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் இருந்து வருகின்றனர். இவற்றில் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களை தவிர மற்ற அனைத்து வியாபாரிகளுக்குமே பெரிய அளவில் வணிகம் வீழ்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா ஊரடங்கு காரணமாக பன்னாட்டு வியாபாரம் கடந்த 5 மாதங்களாக நடைபெறவில்லை. பல நாடுகளில் உற்பத்தியான பொருட்கள் இங்கு வந்து சேராமலும் நம் நாட்டில் உற்பத்தியான பொருட்கள் மற்ற நாடுகளுக்கு சென்று சேராமல் பல இக்கட்டான சூழ்நிலையில் வியாபாரிகளின் உற்பத்தி பொருள்கள் ஆங்காங்கே தேங்கி நிற்கின்றன.

Advertisement

இந்நிலையில் திருச்சி வியாபாரியான கணேஷிடம் பேசினோம்… கொரோனா காரணமாக மிகவும் நலிவடைந்து போயுள்ளோம். நாங்கள் எங்கள் ஊர்களில் விளையும் நெல், பருப்பு, பழங்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்து வருகிறோம். இந்த ஊரடங்கு காரணமாக பல பொருள்கள் இன்னும் எங்கள் குடோனிலேயே இருக்கிறது. உற்பத்தி செய்த பொருள்கள் அனைத்தும் தேங்கி நிற்கிறது. விளைந்த பொருட்கள் திருச்சி மற்றும் பிற மாவட்டங்களில் மட்டுமே விற்பனை செய்து வருகின்றோம். ஏற்றுமதி இல்லாததால் இந்த வருடம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். உற்பத்தி அதிகமாகும் லாபம் குறைவாக இருக்கிறது” என்றார்.

மற்றொரு வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் பழனியிடம் பேசும்போது… “வீட்டு உபயோகப் பொருள்கள் அனைத்தையும் தயார் நிலையில் வைத்துள்ளோம். கட்டில், பீரோ, மெத்தை என அனைத்தும் தயார் நிலையில் இருந்தும், பொதுமக்களிடம் பணம் கொடுத்து வாங்கும் அளவிற்கு மக்களிடத்தில் வருமானம் இல்லை. கடந்த 7 மாதங்களாக சரியாக முகூர்த்தமும் நடைபெறாத நிலையில் லாபம் மிக குறைவாகவே இருக்கிறது. இந்த வருட விஜயதசமிக்கு புதுக்கணக்கை துவங்கு முன் இனிமேலாவது வியாபாரம் செழிக்கும் நம்பிக்கையில் புதிய கணக்குகளை தொடங்கி உள்ளேன் என்ற நம்பிக்கையுடன்…

மொத்தத்தில் இந்த வருட விஜயதசமிக்கு முன்பாக வியாபாரிகள் அனைவருக்கும் உற்பத்தி பொருட்கள் அதிகமாகவும் லாபம் குறைவாகவும் பொதுமக்களிடம் வருமானமின்மை காரணமாக நலிவடைந்து போயுள்ளனர்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *