திருச்சியில் உயர் மின்னழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் சேதம்- டியூப் லைட் வெடித்து சிதறல் மக்கள் அச்சம்
திருச்சி ஏர்போர்ட் பாரதி நகர் மற்றும் விரிவாக்கம், காமராஜர்நகர், திலகர்தெரு பகுதிகளில் உயர்மின் அழுத்ததால் மின்சாரம் பாய்ந்து நள்ளிரவில் வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள் சேதமடைந்ததுள்ளது. பெரும்பாலான வீடுகளில் டியூப்லைட்டுகள் வெடித்து சிதறியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இது நாள் வரையிலும் மின்தடை மட்டும் ஏற்படும். அதேபோன்று குறைந்த அளவு மின்சாரம் வந்து கொண்டிருந்தது. கடந்த வாரத்தில் புதிதாக பாரதிநகரில் உள்ள டிரான்ஸ்பார்மர் மாற்றப்பட்ட நிலையில் தற்போது, உயரழுத்த மின்சாரம் வந்ததால் பெரும்பாலான வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம்அடைந்துள்ளது.
மின்வாரியத்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments