திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் – பேரறிஞர் அண்ணா சரக்கு வாகன முனையத்திற்கும் இடையே, பேருந்து நிலையத்திற்கு செல்லும் உயர்மின் அழுத்த மின்கோபுரம் திடீரென்று சாய்ந்து விழுந்தது
தொடர் விடுமுறை என்பதனால் ஊர்களுக்கு வாகனங்கள் சென்றுகொண்டிருந்தநிலையில், பேருந்து நிலையத்திற்கும் தொடர்ச்சியாக பேருந்துகள் சென்றுகொண்டிருந்த சூழலில் சாலையில் உயர்அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து தீப்பொறி பறந்தது.
உடனே, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தனியார் காவலர் துரிதமாக செயல்பட்டு திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை உடனே நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதனால் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டு அதன்பிறகு மாற்று மின்சாரம் கொடுக்கப்பட்டது. அதேநேரம் சரக்கு வாகன முனையம் முழுவதும் மின்சாரம் தடைப்பட்டது. பஞ்சபூர்த்த இருந்து நிலையப் பகுதிகள் இருளில் மூழ்கியது உங்கள் உடனடியாக மாற்று வழியில் மின்சாரம் கொடுக்கப்பட்டது. திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் தென் தமிழக பகுதியில் இருந்து சென்னையை நோக்கியும், தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் இருந்து இந்த சாலையை கடந்து தான் அனைத்து வாகனங்களும் செல்ல வேண்டும் அப்படி இருக்கும் பொழுது இந்த சம்பவம் நடந்தவுடன் துரிதமாக தனியார் காவலர் போக்குவரத்தை தடை செய்து பெரும் அசம்பாவிதத்தை தடுத்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments